படங்களில்: வட இலங்கையின் யுத்த சேதங்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 ஆகஸ்ட், 2012 - 17:07 ஜிஎம்டி
 • இலங்கையில் யுத்தத்தின் இறுதிக் கட்டம் அரங்கேறிய நாட்டின் வடகிழக்கு மூலைக்குச் சென்றுவர பிபிசிக்கு அனுமதி கிடைத்திருந்தது. அங்கே எங்கு திரும்பினாலும் சேதங்களும் அழிவுகளும் விரவிக் கிடக்கின்றன.
 • இங்கே புதுமாத்தளனிலும் முள்ளிவாய்க்காலிலும்தான் யுத்ததின் மிகவும் அதிகமான சேதங்களைக் காணமுடிகிறது.
 • இடைத்தங்கல் முகாம் ஒன்றிலிருந்து புதுக்குடியிருப்பில் உள்ள தனது வீட்டை வந்து பார்த்த தனபாலசிங்கத்துக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியுமே மிஞ்சியது. பழுது பார்க்க முடியாத அளவுக்கு வீடு சேதமடைந்துள்ளது.
 • புதுக்குடியிருப்பில் அனைத்து கட்டிடங்களுமே ஏதாவது ஒரு வகையில் சேதமடைந்திருக்ககின்றன. வவுனியா தாண்டிய இடங்களிலிருந்தும் மக்கள் இப்போது இங்கு மீளக் குடியேறுவதற்கு வந்துகொண்டுள்ளனர்.
 • ஷெல்வீச்சுக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கும் மரங்கள் கூட தப்பவில்லை. பல மரங்கள் மொட்டையாகி நிற்கின்றன.
 • இந்தப் பிராந்தியத்தில் ஏராளமான கண்ணிவெடிகள் புதையுண்டு இருக்கின்றன. வெடிக்கக் காத்திருக்கும் யுத்தச் சுவடுகள் இவை.
 • இந்தக் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான உதவிப் பிரிவு ஈடுபட்டுள்ளது.
 • பிரிட்டனைத் தளமாகக் கொண்டியங்கும் அரசு சாரா அமைப்பான மைன்ஸ் அட்வைசரி குருப்பின் தொண்டூழியர்களும் கண்ணி வெடி அகற்றும் பணியைச் செய்கின்றனர். இந்த அமைப்பு உள்ளூர் பெண்களைப் பயன்படுத்தி இப்பணியைச் செய்கிறது.
 • சேதமடைந்த கத்தோலிக்க தேவாலயத்தில் ஒரு சிங்களச் சிப்பாய்.
 • புதுமாத்தளனில் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட மண் அரண் இது. 2009 தாக்குதலில் இந்த அரண்களால் அவர்களைக் காப்பாற்ற முடிந்திருக்கவில்லை.
 • 2006ல் விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்ட ஜோர்டானியக் கப்பல் இது. இப்படியான இடங்கள் தற்போது சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் இடங்களாக இருக்கின்றன.
 • முள்ளிவாய்க்கால் அருகே சேதம் தெரியாமல் இருக்கும் ஓர் இந்துக் கோயில் இது.
 • இந்த சேதங்களின் ஊடாக முழுமையாக கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு வருடக்கணக்கில் ஆகும் என்றே தெரிகிறது.
 • முல்லைத்தீவு கடற்கரையில் படகுகள். மீள்குடியேற்றம் முழுமையடையும் பட்சத்தில் இவ்விடத்தில் இயல்புவாழ்க்கை திரும்பும் என்று நம்பபடுகிறது. (படங்கள் மற்றும் குறிப்புகள்: கொழும்பு முகவர் சார்லஸ் ஹவிலண்ட்)

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.