சபரகமுவை மாகாணத்தில் இரண்டு தமிழ்ப் பிரதிநிதிகள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 செப்டம்பர், 2012 - 16:33 ஜிஎம்டி
மத்தி மலைநாட்டுக்கு வெளியே வாழும் ஆயிரக்கணக்கான மலையகத் தமிழர்கள் போதிய அரசியல் பிரதிநிதித்துவமின்றி இருப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்

மத்திய மாகாணத்துக்கு வெளியே உள்ள ஆயிரக்கணக்கான மலையகத் தமிழர்கள் போதிய அரசியல் பிரதிநிதித்துவம் இன்றி உள்ளனர்

இலங்கையில் சபரகமுவை மாகாணசபைக்கான தேர்தலில் இரண்டு தமிழ்ப் பிரதிநிதிகளை தமிழ்க் கட்சிகளின் கூட்டணி வென்றுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து கணபதி கே. இராமச்சந்திரன் மற்றும் கேகாலை மாவட்டத்திலிருந்து அண்ணாமலை பாஸ்கரன் ஆகிய இருவரும் சபரகமுவை மாகாணசபைக்கு தெரிவாகியுள்ளனர்.

மலையகத்தில் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு வெளியே கணிசமான தமிழ் வாக்காளர்கள், பெரும்பான்மை சமூகத்துக்கு மத்தியில் சிதறி வாழ்வதால் அவர்களால் தேசிய அரசியலில் மட்டுமன்றி உள்ளூராட்சி நிர்வாகங்களில் கூட போதுமான அரசியல் பிரதிநிதிகளை வென்றெடுக்க முடியாமல் இருக்கின்றமை நீண்டகாலமாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

தொண்டமான் கருத்து

'தமிழர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி': தொண்டமான் பெருமிதம்

சபரகமுவை மாகாணசபைக்கு இரண்டு தமிழர்கள் தெரிவானமை பற்றி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அறுமுகன் தொண்டமான்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

மலையக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றமையாலும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகளின் செல்வாக்கு காரணமாகவும் தமிழ்ப் பிரதிநிதிகளை வென்றெடுக்க முடியாமல் போவதாக பலரும் சுட்டிக்காட்டிவந்தனர்.

இந்த நிலைமையிலேயே, சபரகமுவை மாகாணம் கலைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மலையகத் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் அந்த மாகாணத்தின் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை மலையக சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்வைத்திருந்தார்கள்.

அதனையடுத்தே, அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கின்ற மலையகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் தற்போது எதிரணி அரசியலில் இருக்கின்ற மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியும் கூட்டணி அமைத்து சபரகமுவை மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டது.

அதன்பலனாக, சபரகமுவை மாகாணத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களிலிருந்தும் தலா ஒரு பிரதிநிதி வீதம் இரண்டு உறுப்பினர்களை தமிழ்க் கட்சிகளின் கூட்டணி முதல்தடவையாக வென்றெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சபரகமுவை மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 28 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 14 ஆசனங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.