அமெரிக்காவை கண்டித்து காத்தான்குடியிலும் ஆர்ப்பாட்டம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 செப்டம்பர், 2012 - 18:20 ஜிஎம்டி
காத்தான்குடியில் நடந்த ஆர்ப்பாட்டம்

காத்தான்குடியில் நடந்த ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவில் இஸ்லாமியர்களின் இறை தூதாரான முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் வீடியோ படமொன்று வெளியிடப்பட்டதை கண்டித்து வெள்ளிக்கிழமை கிழக்கிலங்கையிலும் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினார்கள்.

மட்டக்களப்பு ,காத்தான்குடி தாறுல் அதர் அத்தவ்வியா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திலும் கண்டனப் பேரணியிலும் இஸ்லாமிய அறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி ஜாமியுல் அதர் ஜூம்மா பள்ளிவாயல் முன்றலில் நண்பகல் ஜூம்மா தொழுகையின் பின்னர் கூடிய முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் எதிராக பல்வேறு வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டததை ஏற்பாடு செய்த காத்தான்குடி தாறுல் அதர் அத்தவ்வியா அமைப்பின் பிரச்சாரகரான மௌலவி வி.எம்.அஸ்பர், 'உருவ வழிபாட்டை இஸ்லாம் எதிர்க்கின்றது.குறித்த வீடியோவில் இறை தூதரான நபிகள் நாயகத்திற்கு உருவம் கொடுக்கப்பட்டிருப்பதை இஸ்லாமியர்களை கொச்சைப் படுத்தும் செயலாகவே நாம் கருதுகின்றோம்' என்று கூறினார்.

அமெரிக்காவில் வெளியான இந்த வீடியோ படம் அரபுலகில் பெரும் கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.