கிழக்கு முதல்வர் பதவியை கோரும் அரச கூட்டணி முஸ்லிம் கட்சிகள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 செப்டம்பர், 2012 - 17:49 ஜிஎம்டி
'தேர்தலில் போட்டியிட்ட அரசதரப்பு கூட்டணிதான் கூடுதல் ஆசனங்களை வென்றது':அமைச்சர்ரிசார்ட்

'தேர்தலில் போட்டியிட்ட அரசதரப்பு கூட்டணிதான் கூடுதல் ஆசனங்களை வென்றது':அமைச்சர் ரிசார்ட்

இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்(ஏசிஎம்சி) கட்சியைச் சேர்ந்த அமீர் அலியை முதலமைச்சராக்க வேண்டும் என்று அக்கட்சி பரிந்துரை செய்துள்ளது.

அங்கு தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகி ஒரு வாரமாகியும் கிழக்கில் இன்னும் யார் ஆட்சியை அமைப்பார்கள் என்று தெரியாத ஒரு சூழலே நிலவுகிறது.

ஆளும் கூட்டணியை எதிர்த்து போட்டியிட்டு 7 இடங்களை வென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியும் கோரியுள்ளன.

எனினும் அக்கட்சி இதுவரை தனது நிலைப்பாட்டை வெளியிடாத சூழலில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்கப்படுவதில் இழுபறி தொடருகிறது.

கிழக்கு மாகாண சபையில் ஆளும் கூட்டணி 15 இடங்களையும் தனித்துப் போட்டியிட்டஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 இடங்களையும் பெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் பதவி என்பது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கே அளிக்கப்பட வேண்டும் என்பதில் நியாயம் உள்ளது என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

'மு.காங்கிரஸ் அரசுக்கு அதரவளிப்பதாகக் கூறிவிட்டது': ரிசார்த்

ரவூப் ஹக்கீம்

முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் முடிவை பகிரங்கமாக அறிவிக்கவில்லை

இலங்கையிலுள்ள 6 மாகாணசபைகளில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே முதலமைச்சராவுள்ளனர் எனவும் வட மாகாணத்துக்கு தேர்தல் நடைபெறும் போது தமிழர் ஒருவர் முதலமைச்சர் ஆவது உறுதியாகும் எனவும் கூறும் ரிஷாத் பதியுதீன், கிழக்கு மாகாணத்தில் மட்டுமே முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகும் வாய்ப்பு உள்ளது எனவும் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தச் சூழ்நிலையிலேயே அமீர் அலியை தமது கட்சியும், தேசியக் காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவும் பரிந்துரை செய்துள்ளதாவும் அவர் கூறுகிறார்.

7 இடங்களை மட்டுமே வென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யதார்த்தமாக சிந்தித்து, விட்டுக்கொடுப்பு மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் எனவும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கூறுகிறார்.

தேர்தலுக்கு பின்னர் ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூஃப் ஹக்கீம் கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பதற்கு அரசுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்ததாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.