காவிரி ஆணையத்தின் தீர்ப்புக்கு மீண்டும் மறுஆய்வு கோரும் கர்நாடகா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 செப்டம்பர், 2012 - 16:20 ஜிஎம்டி
காவிரி ஆறு, தமிழ்நாடு

காவிரி ஆறு, தமிழ்நாடு

தமிழ்நாட்டுக்கு காவிரியில் விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவிட்ட பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையத்திடம் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு மீண்டும் வலியுறுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

காவிரி ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், தவறினால் நீதிமன்றம் பொருத்தமான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டியிருக்கும் என்றும் வெள்ளிக்கிழமையன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை பெங்களூரில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

கடந்த 19-ம் தேதி காவிரி ஆணையக் கூட்டத்தில் பிரதமர் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி ஒரு மனுவை கர்நாடக அரசு ஏற்கெனவே தாக்கல் செய்திருந்தது.

தற்போது மீண்டும் அதை வலியுறுத்த கர்நாடகா முடிவு செய்துள்ளது.

முதலில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தபோதே காவிரி ஆணையம் தனது உத்தரவை செயல்படுத்தத் தடை விதித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று ஷெட்டர் தெரிவித்தார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.