தேவையென்றால் 13ஆவது திருத்தம் ரத்து பற்றி பரிசீலிப்போம்: பசில்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 அக்டோபர், 2012 - 17:11 ஜிஎம்டி
பசில் ராஜபக்ஷ

பசில் ராஜபக்ஷ

இலங்கையின் வட மாகாணத்தில் சமுர்த்தி திட்டம் போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்கும், திவிநெகும சட்டத்துக்கும் என்பனவற்றுக்கும் 13வது அரசியல் சட்டத் திருத்தம் தடையாக இருக்கும் என்று கருதப்பட்டால், அதை ரத்து செய்ய இலங்கை அரசு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்துவது குறித்து ஆராயும் என்று இலங்கை பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சரும் ஜனாதிபதி மஹிந்தவின் சகோதரருமான , பசில் ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

நேற்று திங்கட்கிழமை இரவு கொழும்பில் சில தமிழ் ஊடகவியலாளர்களிடையே பேசிய பசில் ராஜபக்ஷ , இலங்கைக்கு பொருளாதார உதவி வழங்கக்கூடாது என்று இந்தியா மற்றும் சீனாவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியதாகவும் குற்றம் சாட்டினார்.

சம்பந்தன் பதில்

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் குற்றச்சாட்டு தவறானது, பொறுப்பற்றது என்று நிராகரித்தார்.

சம்பந்தர் பேட்டி

பசிலின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: சம்பந்தர்

இலங்கைக்கு சர்வதேச உதவி கிடைப்பதை ததேகூ எதிர்க்கிறது என்று பசில் ராஜபக்ஷ கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்கிறார் இரா.சம்பந்தர்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

தாங்கள் இந்திய மற்றும் சீன ராஜிய அலுவலர்களை சந்தித்தபோது, இலங்கைக்குப் பொருளாதர உதவிகள் வழங்க வேண்டாம் என்று கோரவில்லை என்றும், தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்தே பேசினோம் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டார்.

13வது அரசியல் சட்டத்திருத்தம் ரத்து செய்யப்படவேண்டுமா என்பது குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று கூறப்படுவது பற்றி குறிப்பிட்ட சம்பந்தன், இது குறித்து அரசு உறுதியான முடிவெடுக்கும் நிலையில் தனது கருத்தைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.