அறுபது பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்புகிறது பிரிட்டன்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 அக்டோபர், 2012 - 15:44 ஜிஎம்டி
தனி விமானத்தில் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

தனி விமானத்தில் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து மேலும் ஒரு தொகுதி குடியேறிகள் இலங்கைக்குத் திருப்ப அனுப்பப்படவிருக்கின்றனர்.


அறுபது பேர் செவ்வாயன்று தனி விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

"இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை"

ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து திருப்பி அனுப்படவிருந்த பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் வழங்கிய பேட்டி

"இலங்கை திருப்பி அனுப்பினால் தற்கொலை செய்வேன்"

இலங்கைக்கு திரும்பி அனுப்பப்படவுள்ள பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் தமிழோசைக்கு வழங்கிய பேட்டி

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க


தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்டவர்கள்,விசா காலம் முடிந்தும் நாட்டில் தங்கியிருந்தவர்கள் போன்றோர் தற்போது திருப்பி அனுப்பப்படுபவர்களில் அடங்குவர்.


திருப்பி அனுப்பப்படுகின்றவர்களில் சுமார் முப்பது பேர் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தொடர்புகொண்டு பின்னர் ஐக்கிய ராஜ்ஜியத்தில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்தவர்கள் ஆவர்.


இலங்கையிலிருந்து வந்தவர்களில் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறி தஞ்சம் கோரியவர்களின் விண்ணப்பங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டுமென ஐக்கிய ராஜ்ஜிய உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தும், தற்போது இப்படிப்பட்டவர்கள் சிலர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


திருப்பியனுப்பப்படுவோரில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்தவர்கள் சார்பாக வாதிடுகின்ற ஒரு சட்டத்தரணி கீத் குலசேகரம் ஆவார்.

தன்னுடைய கட்சிக்காரர்கள் ஐந்து பேரில் நால்வரை திருப்பி அனுப்பக்கூடாது என்ற ஒரு தடை உத்தரவை நீதிமன்றத்திடம் இருந்து தான் வாங்கிவிட்டதாகக் தமிழோசைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.


இலங்கையிலிருந்து வந்து அரசியல் தஞ்சம் கோரியவர்களைத் திருப்பியனுப்பக்கூடாது என்ற தடை உத்தரவு வழங்குவது பற்றி ஐக்கிய ராஜ்ஜியத்தில் நீதிமன்றங்கள் பரிசீலித்துவரும் நிலையில், முன்கூட்டியே முடிந்தவரையிலான ஆட்களை திருப்பி அனுப்பிவிடலாம் என்ற எண்ணத்தில் ஐக்கிய ராஜ்ஜிய குடிவரவுத்துறை அதிகாரிகள் செயல்படுவதாக குலசேகரம் குற்றம்சாட்டினார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.