இலங்கையில் மீண்டும் பாணின் விலை அதிகரிப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 29 அக்டோபர், 2012 - 16:28 ஜிஎம்டி

இலங்கையில் திங்கட்கிழமை நள்ளிரவு தொடக்கம் பாண் உட்பட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

குறிப்பாக கோதுமை மாவின் விலை கிலோவிற்கு ரூபா 4 தொடக்கம் 6 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்தே இந்த தீர்மானத்தை எடுக்க நேரிட்டதாக அந்த சங்கத்தின் துணைச் செயலாளரான நிமால் பெரேரா கூறுகின்றார்.


இந்த விலை அதிகரிப்பை கவலையுடன் தாம் மேற்கொள்ள வேண்டியேற்பட்டதாகவும் கூறிய அவர், 450 கிராம் எடையுடைய பாணின் தற்போதைய விலை ரூபா 58 என்றும் 2 ரூபா விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து புதிய விலை ரூபா 60 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கின்றார்.


கோதுமை மா மட்டுமல்ல ஏனைய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ள நிலையில் கேக் உட்பட இதர பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இது இந்த ஆண்டின் இரண்டாவது விலை அதிகரிப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.


இலங்கை மக்களின் நாளாந்த உணவுப் பாவனையில் பாண் உட்பட கோதுமை மாவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களும் பிரதான இடத்தை வகிக்கின்றன.

மலையகத்திலும் பிரதான நகரங்களிலும் வாழும் மக்களின் காலை மற்றும் இரவு உணவுகளில் கோதுமை மா பிரதான இடம்பெறுகின்றது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.