மாகாணசபைக்கு அதிகாரம் வழங்குவதற்கு தாதியர் எதிர்ப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 அக்டோபர், 2012 - 17:11 ஜிஎம்டி
தாதியர் நியமன அதிகாரத்தை மாகாணசபைக்கு வழங்குவதாக சுகாதார அமைச்சு அண்மையில் அறிவித்ததன் பின்னணியில் கிளம்பிய எதிர்ப்பு.

தாதியர் நியமன அதிகாரத்தை மாகாணசபைக்கு வழங்குவதாக சுகாதார அமைச்சு அண்மையில் அறிவித்ததன் பின்னணியில் கிளம்பிய எதிர்ப்பு.

இலங்கையில் மருத்துவமனைகளில் பணியாற்றும் தாதியர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்குவதற்கு மத்திய அரசாங்கம் எடுத்துள்ள முடிவை ரத்துசெய்யுமாறு வலியுறுத்தும் அமைதி ஆர்ப்பாட்டங்கள் நாட்டின் பலபகுதிகளிலும் நடத்தப்பட்டுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இரண்டு மணிநேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட இலங்கை தாதியர் சங்கத்தின் உறுப்பினர்கள் மருத்துவமனைகளின் முன்பாக இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

தாதியர் நியமனத்தை மாகாணசபைகளின் பொறுப்பில் விட்டால் தாதியரை இணைத்துக்கொள்ளும் நடைமுறையில் உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீடும் செல்வாக்கும் உண்டாகுமென்று கொழும்பு தேசிய மருத்துவமனையின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய கூறினார்.

மத்திய அரசின் கீழிருந்த தாதியர் நியமனத்துக்கான அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்குவதாக தேசிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த பின்னணியிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 13-வது திருத்தம் ஊடாக மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றபோதிலும், தாதியர் நியமன அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்குவதன்மூலம் அந்த நடைமுறை அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தப்படலாம் என்று சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் தீர்மானத்தை ரத்துசெய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தில் இறங்கப்போவதாகவும் இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் கூறினார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.