'ஐநா அறிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 நவம்பர், 2012 - 16:52 ஜிஎம்டி

பிபிசிக்கு கசிந்ததாகக் கூறப்படும் ஐநா அறிக்கை அதிகாரபூர்வமாக வெளிவந்த பின்னர் அது குறித்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் கூறியுள்ளார்.

யுத்த வேளையில் ஐநா அதிகாரிகள் வன்னியில் இருந்து வெளியேறியமையானது - அங்கு செய்தியாளர்களோ அல்லது வேறு எந்த கண்காணிப்பாளர்களோ செல்ல அனுமதிக்கப்படாத நிலையில்- அங்கு ஒரு சாட்சிகளற்ற யுத்தத்துக்கு காரணமாகிவிட்டது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

'சாட்சிகளற்ற போருக்கு காரணமாகிவிட்டது'

'ஐநாவின் வெளியேற்றம் சாட்சிகளற்ற போருக்கு காரணமாகிவிட்டது'

ஐநா வன்னியில் இருந்து வெளியேறியதால் அங்கு சாட்சிகளற்ற ஒரு போர் நடக்கும் நிலை உருவாகி, பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்க நேரிட்டது என்று இரா சம்பந்தர் கூறுகிறார்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

தமக்கு எவரையும் பழிவாங்கும் நோக்கம் கிடையாது என்கின்ற போதிலும் போர் வேளையில் என்ன நடந்தது என்பது குறித்த உண்மை அறியப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐநா தமது ஆணைக்கு உட்பட்ட வகையில் செயற்பட்டதா என்பதை அதன் செயலாளர் ஆராய்ந்து அதற்கான பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.