இலங்கை: ஐநா அறிக்கை வெளியிடப்பட்டது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 நவம்பர், 2012 - 18:10 ஜிஎம்டி
'கொலைகளை தடுக்க ஐ.நா தவறியது'

இலங்கை வெளிநாட்டமைச்சர் பீரிசுடன் , ஐநா மன்றத் தலைமைச் செயலர் பான்கி மூன்-- 'கொலைகளைத் தடுக்க ஐ.நா மன்றம் தவறியது'

இலங்கையில் நடந்து முடிந்த போரின் இறுதிக்கட்டத்தில், ஐநா மன்றம் செயல்பட முடியாமல் தோல்வியடைய வழி வகுத்த, 'அமைப்பு சீர்குலைவு' மீண்டும் ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று தனக்கு ஆலோசனை கூற ஐ.நா மன்றத் தலமைச் செயலர் பான் கி மூன், குழு ஒன்றை நியமித்திருக்கிறார்.

ஐ.நா மன்றம் இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் சாதாரண பொதுமக்களைப் பாதுகாக்க தனக்கு இருந்த ஆணையை நிறைவேற்றத் தவறியது குறித்த விவரங்கள் அடங்கிய உள்ளக விசாரணை அறிக்கையை ,தலைமைச் செயலர் பிரசுரித்து விட்டார் என்று அவருக்காகப் பேசவல்ல ஒரு அதிகாரி கூறினார்.

இந்த அறிக்கை, உயிர்ச்சேத விவரங்களை ஐ.நா மன்றம் வெளியிடத் தவறியது, மற்றும் பொதுமக்கள் கொலைகளுக்கு அரசாங்கத்துக்கு இருந்த பொறுப்பு ஆகியவைகளையும் விவரிக்கிறது.

ஐ.நா மன்றம் இந்த சம்பவத்திலிருந்து பொருத்தமான பாடங்களைப் பெறவேண்டும், மோதல் பகுதிகளில் உதவியை நாடும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற தன்னாலான அனைத்தையும் செய்யவேண்டும் என்று தலைமைச் செயலர் பான் கி மூன் உறுதியுடன் இருப்பதாக அந்த அதிகாரி கூறினார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.