எகிப்தில் பஸ்-ரயில் விபத்தில் 47 பள்ளிச்சிறார்கள் பலி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 நவம்பர், 2012 - 11:50 ஜிஎம்டி
பள்ளிச்சிறார்களை ஏற்றிய பஸ்ஸொன்று ரயில் கடவையை நெருங்கியபோது வீதித் தடைகள் திறக்கப்பட்டே இருந்ததால் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

பள்ளிச்சிறார்களை ஏற்றிய பஸ்ஸொன்று ரயில் கடவையை நெருங்கியபோது வீதித் தடைகள் திறக்கப்பட்டே இருந்ததால் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

எகிப்தில் பள்ளிச் சிறார்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்று ரயிலொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 47 சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாலர் பள்ளியொன்றிலிருந்து 60 சிறார்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸொன்று கெய்ரோவுக்கு தெற்கே 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரயில் கடவையொன்றில் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

4 முதல் 6 வயது வரையான குழந்தைகள் கொல்லப்பட்ட இந்த சம்பவத்தையடுத்து எகிப்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி விலகியுள்ளார்.

ரயில் கடவையை பஸ் நெருங்கிய போது அங்கு வீதித் தடைகள் திறக்கப்பட்டே இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
விபத்தில் மேலும் 13 சிறார்களும் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் எதிரொலியால் நாட்டின் ரயில்வே அதிகாரசபையின் தலைவரும் பதவி விலகியுள்ளார்.

எகிப்தின் வீதிகளும் ரயில் பாதைகளும் மிகமோசமான விபத்துக்களுக்கு காரணமாகின்றன. அங்கு ஆண்டுக்கு 8 ஆயிரம் பேர் வீதி விபத்துக்களில் கொல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.