'புதிய தலைமை நீதியரசரை நியமித்தால் புறக்கணிப்போம்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 டிசம்பர், 2012 - 17:09 ஜிஎம்டி
சட்டத்தரணி உபுல் ஜயசூரிய

சட்டத்தரணி உபுல் ஜயசூரிய

தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்துவிட்டு, அவரது இடத்துக்கு புதிய நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டால், புதிதாக நியமிக்கப்படும் தலைமை நீதியரசரை புறக்கணிக்குமாறு கோரும் தீர்மானமொன்று இன்று சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பாக விவாதிப்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் எதிர்வரும் 15-ம் திகதி நடக்கவுள்ளது.

தலைமை நீதியரசருக்கு எதிரான விசாரணையை நியாயமாக நடத்தாமல் அவரை பதவிநீக்கம் செய்வதற்கு அரசாங்கம் முயன்றுவருவதாக தீர்மானத்தை முன்வைத்துள்ள சட்டத்தரணி உபுல் ஜயசூரிய பிபிசியிடம் கூறினார்.

புதிதாக நியமிக்கப்படக்கூடிய தலைமை நீதியரசரை புறக்கணிக்காவிட்டால் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை சிதைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் கையொப்பமிட்டுள்ளனர்.

ஷிராணி விவகாரத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாப்பின்படி, தமக்குள்ள சட்டவரம்புகளுக்கு ஏற்ப தாம் செயற்பட்டுவருவதாக சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ கூறினார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.