தாக்குதலைக் கண்டித்து யாழ். மருத்துவர்கள் போராட்டம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 டிசம்பர், 2012 - 16:43 ஜிஎம்டி
யாழ்.மருத்துவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவருவதாகக் கூறுகின்றனர்.

யாழ்.மருத்துவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவருவதாகக் கூறுகின்றனர்.

யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் இன்று வெள்ளிக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

தமது வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஒருவர் வாள்வெட்டுக்கு உள்ளாகியுள்ள சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணர் டாக்டர் திருமாறன் வியாழக்கிழமை இரவு 9.45 மணியளவில் யாழ். கந்தர்மடம் பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால் வாள் வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்திருக்கின்றார்.

கையில் விழுந்த வாள் வெட்டு காரணமாக இவர் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

யாழ் மருத்துவர்களின் பணிபுறக்கணிப்பு நாளை சனிக்கிழமையும் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர்கள் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்துள்ளனர்.

எனவே, இத்தகைய தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரியே தாங்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.