மழை வெள்ளத்தில் 31 பேர் பலி; 12 பேர் பற்றி தகவல் இல்லை!

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 டிசம்பர், 2012 - 17:25 ஜிஎம்டி
மழைவெள்ளத்தில் சிக்கிய ட்ரக்டர் வாகனத்தை மீட்கும் மக்கள்

மழைவெள்ளத்தில் சிக்கிய ட்ரக்டர் வாகனத்தை மீட்கும் மக்கள்

இலங்கையில் மழை வெள்ளத்தினாலும் மண் சரிவுகளினாலும் ஏற்பட்ட மரணங்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் எண்ணிக்கையும் மேலும் உயர்ந்துள்ளன.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது என்று நாட்டின் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.

பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 75 ஆயிரம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மழை வெள்ளத்தினால் மண் சரிவுகள் ஏற்பட்ட மத்திய மாகாணத்திலேயே கூடுதலான உயிரிழப்புகளும் ஆட்கள் காணாமல் போன சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

மாத்தளை மாவட்டத்தில் மட்டும் 9பேர் உயிழந்துள்ளனர். அங்கு காணாமல் போன 7 பேர் தொடர்பில் இன்னும் தகவல்கள் இல்லை. கண்டி மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகிறது.

கிழக்கு மாகாணத்திலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கும் 5 பேரை காணவில்லை.

இதற்கிடையில் கடல் கொந்தளிப்பு மற்றும் வழமைக்கு மாறான கால நிலையிலும் கூட கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியா நோக்கிய சட்ட விரோத பயண முயற்சிகள் தொடர்கின்றன.

புத்தளம் மாவட்டம், சிலாபம் கடலில் மீன்பிடிப் படகொன்றில் புறப்பட்ட பெண்கள், குழந்தைகள் அடங்கலாக 22 தமிழர்கள் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.