இலங்கையில் நத்தார் மர விற்பனையில் தொய்வு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 டிசம்பர், 2012 - 15:28 ஜிஎம்டி
நத்தார் மர தோட்டம்

நத்தார் மர தோட்டம் ஒன்று

இலங்கையில் நத்தார் மர விற்பனையில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.


நத்தார் மரங்களை பண்டாரவளை பகுதியில் இருந்து கொண்டுவந்து கொழும்பு நகரசபை மண்டபம் அருகில் வைத்து விற்பனை செய்யும் வியாபாரிகளே விற்பனை குறைந்துள்ளதாக நொந்துகொள்கின்றனர்.


நத்தார் மரங்கள் விலை அதிரித்துள்ளதன் காரணமாகவே விற்பனை குறைந்துள்ளதென வியாபாரி பண்டார பிபிசியிடம் கூறினார்.


நத்தார் மரங்களை கொழும்பு கொண்டுவருவதற்கான போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதே இந்த விலையேற்றத்துக்கு காரணம் என அவர் குறிப்பிட்டார்.


செயற்கை நத்தார் மரங்கள் சந்தையில் கிடைப்பதால் இயற்கை மரங்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டதாக இன்னொரு வியாபாரி குறிப்பிடுகிறார்.


கொழும்பு மாநகரசபையின் அனுமதி பெற்று அவ்விடத்தில் வைத்து தாங்கள் மரங்களை விற்றாலும் பொலிசார் தங்களை அவ்விடத்திலிருந்து நகரச் சொல்லுவதாகவும் வியாபாரிகள் குறிப்பிட்டனர்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.