ஆஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழ் இளைஞன் தற்கொலை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 ஜனவரி, 2013 - 16:47 ஜிஎம்டி
மனவழுத்தம் தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது

மனவழுத்தம் தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த இலங்கைத் தமிழ் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பதை ஆஸ்திரேலியக் குடிவரவுத்துறை உறுதிசெய்துள்ளது.

தனது தஞ்சக் கோரிக்கை விண்ணப்பத்தின் ஆரம்ப விசாரணைகள் மட்டுமே முடிந்திருந்த நிலையில், சமூகத்தில் இணைந்து வாழ்வதற்காக தடுப்புக் காவல் முகாமிலிருந்து வெளியில் விடப்பட்டவர் இவரென்று குடிவரவுத்துறை கூறுகிறது.

பாலா விக்னேஸ்வரன் பேட்டி

தற்கொலை செய்துகொண்டவர் யார்?

ஆஸ்திரேலியாவில் தற்கொலை செய்துகொண்ட இலங்கைத் தமிழர் பற்றி ஆஸ்திரேலிய தமிழர் பேரவையைச் சேர்ந்த பாலா விக்னேஸ்வரன் தமிழோசைக்கு வழங்கிய விவரங்கள்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இளம் மனைவியையும் சிறு பிள்ளையும் பிரிந்து வாடிய இந்த இளைஞனுக்கு மன அழுத்தம் இருந்தது என்று அவரைத் தெரிந்தவர்கள் கூறுவதாக ஆஸ்திரேலிய தமிழர் பேரவையைச் சேர்ந்த பாலா விக்னேஸ்வரன் தமிழோசையிடம் கூறினார்.

இவரது தஞ்சக் கோரிக்கை விண்ணப்பத்தின் முக்கிய நடைமுறைகள் ஆரம்பித்திருக்கவில்லை என்றும், ஆதலால் இவரது தற்கொலையையும் இவரது தஞ்சக் கோரிக்கை விண்ணப்பத்தையும் நேரடியாகத் தொடர்புபடுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

தஞ்சம் கோரியவர்களில் சிலரை அகதி முகாம்களில் வைக்காமல் சமூகத்தில் இணைந்து வாழ ஆஸ்திரேலிய அரசு அனுமதித்தாலும், இப்படி வெளியில் விடப்பட்டவர்களுக்கு உரிய பராமரிப்பு கிடைக்காத ஒரு சூழல் நிலவுவதாக பாலா விக்னேஸ்வரன் கருத்து வெளியிட்டார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.