காஷ்மீரில் இந்திய-பாக். படைகள் இடையே புதிய மோதல்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 ஜனவரி, 2013 - 11:55 ஜிஎம்டி
எல்லைக் காவலில் இந்தியப் படையினர்

எல்லைக் காவலில் இந்தியப் படையினர்

காஷ்மீரில் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினருடன் மீண்டும் புதிய துப்பாக்கிச் சண்டைகள் நடந்துள்ளதாக இந்தியா கூறுகிறது.

கோபமூட்டும் சம்பவங்கள் ஏதும் நடக்காமலேயே இந்தியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமது சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்து ஒரு நாள் கடந்துள்ள நிலையில் இந்த பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் நடந்துள்ளது.

ஆனால் பாகிஸ்தானிய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னரே தாமும் பதிலுக்குத் திருப்பித் தாக்கியதாக இந்தியா தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாயக்கிழமை இரண்டு இந்திய சிப்பாய்களும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானிய படைச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்ட நிலையில், கடந்த ஐந்து நாட்களில் மூன்றாவது தடவையாக இவ்வாறான துப்பாக்கிச் சண்டைகள் நடந்துள்ளன.

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் ஏற்பட்ட ஆட்சேத விபரங்கள் தெரியவில்லை.

'இந்த மோதல் சிறியவில்தான் நடந்தது, நாங்களும் சிறு ஆயுதங்களைக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தினோம்' என்று இந்திய இராணுவப் பேச்சாளர் கர்ணல் பால்ட்டா பிபிசியிடம் தெரிவித்தார்.

எல்லைப்பகுதியில் ஆயுததாரிகள் ஊடுறுவாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பூன்ச் மாவட்ட போலிஸ் உயரதிகாரி கூறியுள்ளார்.

பிராந்தியத்தில் அமைதியைக் கடைப்பிடிக்குமாறு இரண்டு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.