மாணவர்களை குறைந்த வயதில் பல்கலை. கல்விக்கு உள்வாங்க முடிவு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 ஜனவரி, 2013 - 17:09 ஜிஎம்டி
நாட்டின் அரச கல்வியை பாதுகாக்குமாறு கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

நாட்டின் அரச கல்வியை பாதுகாக்குமாறு கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை குறைந்த வயதிலேயே உள்வாங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாணவர்களை ஓரிரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்காக பள்ளிக்கூடங்களிலும் மாணவர்களை 4 வயது போன்ற குறைந்த வயதிலேயே சேர்க்க முடியுமா அல்லது 7 முதல் 10-ம் வகுப்பு வரையான வகுப்புகளில் ஒன்றைக் குறைக்க முடியுமா என்று ஆராய்ந்துகொண்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

கடந்த தினங்களில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் பீடாதிபதிகள் கலந்துகொண்ட வதிவிட கருத்தரங்கின்போது இதுபற்றி ஆழமாக ஆராயப்பட்டதாக உயர்கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
கல்வித்துறை சார்ந்த நிபுணர்கள் இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்துவருவதாகவும் அமைச்சர் திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க

'4 வயதில் பள்ளிக்கூடமும் 16 வயதில் பல்கலையும்': அமைச்சர் எஸ்.பி.

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

தொழில் வாய்ப்பு

மாணவர்களை 16 அல்லது 17 வயதுகளுக்குள் பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்குவது உயர்கல்வி முடித்தபின்னர் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக இருக்கும் என்று அமைச்சர் கூறினார்.

இதேவேளை, பல்கலைக்கழகங்களில் தற்போது தொழிற்சந்தைக்குத் தேவையான விதத்தில் கற்கைநெறிகள் மாற்றியமைக்கப்பட்டுவருவதாகவும் மாணவர்களுக்கு ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழிநுட்ப அறிவுகளை வளர்க்கும் விதத்தில் பாடத்திட்டத்தில் அமைந்துள்ளதாகவும் எஸ்.பி.திசாநாயக்க தமிழோசையிடம் தெரிவித்தார்.

பேராசிரியர் சந்திரசேகரன்

'பல்கலைக்கழக அனுமதி வயதைக் குறைப்பது நல்லதே'

இலங்கையில் பள்ளிக் கல்விக்கான ஆண்டுகளை குறைப்பதில் சில பாதகங்கள் இருந்தாலும், பல்கலைக்கழ அனுமதிக்கான வயதைக் குறைப்பது வரவேற்கத்தக்கதே என்று கல்வியியலாளரான பேராசிரியர் சோ. சந்திரசேகரன் கூறியுள்ளார்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இதேவேளை, நாட்டில் 7 லட்சம் தொழில்களுக்கு வெற்றிடம் இருப்பதாகவும் ஆனால் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் மாணவர்கள் அரச தொழில்களைத் தேடிக் கொண்டிருப்பதாலேயே நாட்டில் பட்டதாரிகளுக்கு தொழில் கிடைப்பதில்லை என்றும் இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மேலும் கூறினார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.