65வது சுதந்திர தின நிகழ்வு திருகோணமலையில் நடந்தது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 4 பிப்ரவரி, 2013 - 16:36 ஜிஎம்டி
சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

இலங்கையின் 65-வது சுதந்திர தின நிகழ்வு கிழக்கு நகரான திருகோணமலையில் இன்று திங்கட்கிழமை (04-02-2013) நடந்துள்ளது.

நாட்டில் எல்லோரும் சம உரிமையோடு வாழ்வதே நல்ல தீர்வு என்று சுதந்திர தின விழா மேடையில் பேசிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இனபேதம் போலவே மதபேதமும் நாட்டில் பிரிவினை உருவாக வழிவகுக்கும் என்றும் அதனை அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

'இலங்கையையும் நாட்டு மக்களையும் விட்டு விலகிச் சென்ற வெளிநாட்டு புலம்பெயர் மக்களை விட உங்கள் அயல்வாசிகளை நீங்கள் நம்பவேண்டும்' என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்திர தின உரையின்போது தமிழிலும் சில வார்த்தைகள் பேசிய மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

65- வது சுதந்திர தின நிகழ்வு

65-வது சுதந்திர தின நிகழ்வு

நாட்டின் 65வது சுதந்திர தின கொண்டாட்டங்களின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எவரும் தென்படவில்லை என்று அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

60 ஆண்டுகளுக்குப் பின்னர் திருகோணமலை நகரில் நாட்டின் பிரதான சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றுள்ளதாக இலங்கை அரசின் இணையதளம் கூறுகிறது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.