இலங்கையில் கஃபீர் சமூகத்தின் எதிர்காலம் என்ன ?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 பிப்ரவரி, 2013 - 18:26 ஜிஎம்டி

கஃபீர் இன மக்களின் எதிர்காலம் என்ன ?

இலங்கையில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து வரும், கஃபீர் மக்களுக்கு எதிர்காலம் என ஒன்று உள்ளதா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து வரும், கத்தோலிக்க கிறிஸ்த்தவர்களான கஃபீர் மக்களுக்கு, எதிர்காலம் என ஒன்று உள்ளதா என்பதே, அந்தச் சமூகத்தின் முன்னர் இன்று உள்ள மிகப் பெரிய கேள்வி.

கஃபீர் இன மக்களின் ஒரு வீட்டு சமயலரை. அவர்கள் வாழ்க்கை நிலையின் ஒரு எடுத்துக்காட்டு.

ஆப்பிரிக்காவிலிருந்து 350 ஆண்டுகளுக்கும் முன்னர் இலங்கைக்கு அடிமைகளாக கொண்டு வரப்பட்டவர்களின் வம்சாவளியினரான இம்மக்கள் பல பிரச்சினகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை விட, பிரச்சினைகளுக்கு நடுவே வாழ்கிறார்கள் என்பதே உண்மை.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் மட்டும் அவர்களது வாழ்க்கையில், சமூக மற்றும் கலாச்சார ரீதியில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

தலைமுடியை சீவுவது முதல் உடைகள் அணிவது வரை இம்மக்கள் சிங்களப் பெண்மணிகளின் சாயலைத்தான் பின்பற்றும் நிலை இன்றுள்ளது.

இதன் காரணமாக தாங்கள் தம்மை மெல்ல மெல்ல இழந்து வருவதாகவும், அது தடுக்க முடியாத ஒன்று எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

எனினும் பல ஆண்டுகளாக இந்த கஃபீர் இன மக்கள், தமிழ் மொழியிலேயே பாடசாலையில் கற்றும், பேசியும் வந்தனர் என இலங்கையிலுள்ள கஃபீர் சமூக நலச்சங்கத்தின் தலைவர் கோவிலகே கிறிஸ்ட்டி சுட்டிக்காட்டுகிறார்.

இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் இலங்கையில் கஃபீர் சமுகம் இல்லாமல் போய்விடக் கூடும் எனும் கவலைகள் தமக்கு இருப்பதாகவும் கிறிஸ்ட்டி கூறுகிறார்.

இந்த மக்கள் மிகவும் பலவீனமான நிலையில் வாழ்ந்து வருவதாகவும், அவர்களுக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பு என்று சுட்டிக்காட்டுகிறார், உள்ளுர் சமூக ஒருங்கிணைப்பாளர் இர்ஷாத் ரஹமத்துல்லா.

கஃபீர் இன மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்புகள் ஆகியவை இலங்கையில் பாதுகாக்கப்பட வேண்டியத் தேவை உள்ளது எனவும் கூறும் இர்ஷாத் ரஹமத்துல்லா, பெரும்பான்மை சமூகத்துக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இம்மக்களுக்கும் கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.

இலங்கையில் இம்மக்களின் சமூக பொருளாதார நிலை குறித்து ஆராய்ந்து நமது சிவராமகிருஷ்ணன், தயாரித்து வழங்கும் சிறப்புத் தொடரின் மூன்றாம் மற்றும் நிறைவுப் பகுதியை இங்கே கேட்கலாம்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.