"முழுப்பூசணியை மறைக்கிறார் மஹிந்த சமரசிங்க"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 1 மார்ச், 2013 - 17:19 ஜிஎம்டி
வன்னியில் திறந்தவெளியில் இயங்கும் பள்ளிக் கூடம்

வன்னியில் திறந்தவெளியில் இயங்கும் பள்ளிக் கூடம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22 வது அமர்வில் இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத்தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசசிங்க கூறியுள்ள கருத்துக்கள் உண்மைக்கு மாறானவை என்று சிவில் சமூக அமைப்புக்கள் கூறுகின்றன.

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தேவையில்லாத ஒன்று என்றும், அது கொண்டுவரப்பட்டிருக்கும் நேரம் கூட தவறானது என்றும், அது ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்றும் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தெரிவித்தது.

புதன்கிழமை ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் தரப்புவாதங்களை முன்வைத்துப் பேசிய அமைச்சர் மஹிந்த சமரசசிங்க, மனித உரிமைகள் நிலமைகள் தொடர்பில் இலங்கை ஏற்கனவே உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்ட நிலையில் இந்தத் தீர்மானம் தமது அபிப்பிராயப்படி தேவையற்ற ஒன்று என்று கூறியிருந்தார்.

ஆனால் இலங்கையில் மனித உரிமைகள் சூழலில் முன்னேற்றமில்லை என்று உள்ளூர் சிவில் சமூக அமைப்புக்கள் கூறுகின்றன.

இராணுவக் கெடுபிடி

படையினரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகக் மஹிந்த சமரசிங்க தெரிவித்தது முழு பூசணியை மறைக்கும் நடவடிக்கை என்று பெண்கள் நடவடிக்கை வலையமைப்பைச் சேர்ந்த சித்தாரா ஷரீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

படையினரிடம் தமது உறவினர்களை கையளித்த பலருக்கு அவர்களின் நிலை என்னஆனது என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார். "இலங்கை அரச நிர்வாகத்தில் இராணுவ குறுக்கீடு இல்லை என்று அரசு கூறுகிறது ஆனால் வடக்கே இரண்டு லட்சம் இராணுவத்தினர் இருக்கின்றனர். நிரந்தர கட்டமைப்புகளையும் இராணுவம் உருவாக்கி வருகிறது. பாலர் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தைக்கூட இராணுவம்தான் வழங்குகிறது," என்றார் அவர்.

அரசு சாரா நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் அவர்களால் செயல்பட முடியாமல் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.