'கற்பிட்டி கடலில் இந்திய மீனவர் கைது'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 3 மார்ச், 2013 - 12:49 ஜிஎம்டி
முன்னர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர் ( ஆவணப்படம்)

முன்னர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர் ( ஆவணப்படம்)

இலங்கையின் வடமேற்கு கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்நு மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக் கடற்படை கூறுகின்றது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புத்தளம் மாவட்டம் கற்பிட்டி கடல் பகுதியில் கடற்படையின் ரோந்து நடவடிக்கையின் போது அவதானிக்கப்பட்டு, கைதான 16 மீனவர்களும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இம்மீனவர்களுக்கு சொந்தமான மூன்று மீன்பிடி வள்ளங்களும் மற்றும் உபகரணங்களும் இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கொமாண்டோர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் 2 மைல் உள்ளே நுழைந்து இவர்கள் அத்து மீறி மீன் பிடித்ததாகவும் கூறியுள்ள இலங்கைக் கடற்படை, 16 மீனவர்களும் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி காவல் துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றது.


ஏற்கனவே வட மாகாணக் கடலில் அத்து மீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்திய மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சட்ட நடிவடிக்கைகளுக்கும் உள்ளாகியுள்ளார்கள்.
வடமாகாணத்தில் இவர்களின் அத்துமீறல்கள் மற்றும் மீன்பிடித்தல் தொடர்வதாக குற்றஞ்சாட்டும் உள்ளுர் மீனவ அமைப்புகள் இதனை நிறுத்த வேண்டும் என போராட்டங்களையும் அவ்வப்போது நடத்தி வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையிலே வடமேற்கு கடல் பிரதேசத்தில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.