காணமல் போனோரின் உறவினர்கள் தடுத்து வைப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 மார்ச், 2013 - 15:12 ஜிஎம்டி
காணமல் போனோரின் புகைப் படங்கள்

காணமல் போனோரின் புகைப் படங்கள்

கொழும்பில் புதன் கிழமை நடைபெறவுள்ள காணாமல் போனோர் மற்றும் தடுப்பில் உள்ளவர்களின் உறவினர்கள் பங்குபெறவுள்ளவுள்ள பேரணியில் கலந்து கொள்வதற்காக வடக்கில் இருந்து செல்லவிருந்த மக்களை பொலிசார் வவுனியாவில் தடுத்து வைத்திருப்பதாக இந்தப் பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

நாளை காலை 9 மணிக்கு கொழும்பில் ஒன்று கூடுவதற்காக இவர்கள் யாழ்பபாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருமட் எண்ணிக்கையிலான குடும்ப உறவினர்கள் கொழும்பு செல்வதற்காக இன்று மாலை வவுனியாவில் வந்து கூடியிருந்தனர்.

இங்கிருந்து 11 பஸ் வண்டிகளில் அவர்கள் மாலை 6 மணிக்குப் பயணமாக இருந்த வேளை, அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என தெரிவித்து வவுனியா பொலிசார் அவர்களைத் தடுத்து வைத்திருக்கின்றனர். 11 பஸ் வண்டிகளில் அந்த மக்கள் வவுனியா நகரசபை மைதானத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

போரின் இறுதி கட்டத்தில் சரணடைந்து காணமல்போனவர்கள், போரின் போதும் போதும் காணம் போனோர் என பல்வேறு கால கட்டங்களில் காணமல் போனோரை அவர்களின் உறவினர்கள் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர்.

காணமல்போனோரை கண்டுபிடிக்க பல உதவிகளைச் செய்யப் போவதாக அரசு அவ்வப்போது கூறினாலும், இது குறித்த உண்மையான அக்கரையை அரசு காட்டவில்லை என்று நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.