'வேடுவர்களின் உரிமைகளும் ஐநா தீர்மானத்தில் வரவேண்டும்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 மார்ச், 2013 - 16:32 ஜிஎம்டி

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தில், இலங்கையின் பழங்குடியின மக்களான வேடுவர்களின் உரிமைகள் குறித்தும் வலியுறுத்தப்பட வேண்டும் என்று சவர்வைல் இண்டர்நாஷனல் என்னும் சர்வதேச அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

ஆய்வாளர் விஜய் எட்வின் செவ்வி

'வேடுவர்கள் பலவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்'

அருகிவரும் இனமான வேடுவர்கள் இலங்கையில் அனேக பிரச்சினைகளை எதிர்கொள்வதாக வேடுவர்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் மானுடவியல் ஆய்வாளரான விஜய் எட்வின் கூறுகிறார்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையில் வேடுவர்களின் பாரம்பரிய வதிவிடங்கள் சிங்கள குடியேற்றவாசிகளால் அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், தமது பாரம்பரிய காடுகளில் தமது தேவைகளுக்காக வேட்டையாடுவதற்கு வேடுவர்கள் தடுக்கப்படுவதாகவும், தமது உறைவிடங்களான காடுகளை அவர்கள் இழந்துள்ளதாகவும் கூறுகிற அந்த அமைப்பு, இது குறித்து இலங்கை அரசாங்கங்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் எதுவும் சரியாக நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறுகிறது.

இலங்கையில் தற்போதைய நிலைமைகளில் வேடுவ இனத்தவர்கள், வழமையான காடுகளை இழத்தல், பாரம்பரிய வதிவிட உரிமை, வேட்டையாடுவதற்கான உரிமை அகியவற்றை இழத்தல் என்பவற்றுடன், தமிழ் பகுதிகளில் வாழும் வேடுவர்கள் போரினால் ஏற்பட்ட பல பிரச்சினைகளையும் எதிர்கொள்வதாகக் கூறுகிறார், வேடுவர்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட மானுடவியல் ஆய்வாளர் விஜய் எட்வின்.

இந்த விடயம் குறித்து அவர் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.