இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்ட தமிழ் யுவதிகள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 மார்ச், 2013 - 16:30 ஜிஎம்டி
இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்கள்

இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்கள்

இலங்கை இராணுவத்தில், எதிர்ப்புகளுக்கு மத்தியில் முதன் முறையாக இணைத்துக் கொள்ளப்பட்ட 95 தமிழ் யுவதிகள் தமது இராணுவ பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற பயிற்சி நிறைவு தின வைபவத்தில், இராணுவத்தின் மூத்த தமிழ் அதிகாரியான பிரிகேடியர் ஆர்.ரட்னசிங்கம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

தமிழ்ப் பெண் இராணுவத்தினரின் இராணுவ அணிவகுப்பைப் பார்வையிட்டபின்னர், அங்கு உரையாற்றிய பிரிகேடியர் ரட்னசிங்கம் இதேபோன்று மேலும் தமிழ்ப் பெண்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ள தமிழ்ப் பெண்கள் இராணுவத்தின் நிர்வாகச் செயற்பாடுகளில் கணணி இயக்குனர்கள், எழுதுவினைஞர்கள் மற்றும் தாதியர் உதவியாளர்கள் போன்ற பணிகளில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

தமது பிள்ளைகள் இராணுவத்தில் இணைந்து தொழில் வாய்ப்பைப் பெற்றிருப்பது குறித்து, இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்த பெற்றோர்கள் சிலர் திருப்தியும் மகிழ்ச்சியும் வெளியிட்டுள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்தத் தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டபோது பலதரப்பினரும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.