பிரிட்டனில் இலங்கைத் தமிழர் மரணம் : ஒருவர் கைது

  • 12 ஏப்ரல் 2013

இங்கு பிரிட்டனில் பெட்ஃபோர்ட் என்னும் இடத்தில் கடை ஒன்றை வத்திருந்த இலங்கைத் தமிழரான வைரமுத்து தியாகராஜா என்பவர் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

தனது கடைக்கு மேலே உள்ள தனது அடுக்குமாடி வீட்டிலேயே அவர் காயமடைந்து காணப்பட்டார். 56 வயதான அவர் பின்னர் மருத்துவமனையில் மரணமானார்.

இந்த சம்பவம் தொடர்பில், மஜிஸ்திரேட் முன்பாக ஆஜர் செய்யப்பட்ட திலக் மோகன் ராஜ் (25 வயது) மீது கடுமையான காயங்களை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிரேதப் பரிசோதனை திங்களன்று நடைபெறும்.