'மட்டக்களப்பிலும் படையினருக்காக காணிகள் சுவீகரிக்க நடவடிக்கை'

  • 24 ஏப்ரல் 2013

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் தேவைக்காக 12 இடங்களில் காணிகளை சுவீகரிக்க அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக வட்டாரங்கள் கூறியுள்ளன.

இது தொடர்பாக மாவட்ட செயலகத்தில் ஆரம்பக்கட்ட ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இதில் பாதுகாப்பு , காணி அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டதாகத் தெரியவருகிறது.

வாகரை, கிரான், வாழைச்சேனை, செங்கலடி, பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 12 இடங்களில் தற்போது படையினர் நிலைகொண்டுள்ள இடங்களில் காணிகள் அடையாளம் காணப்பட்டதாக தெரிய வருகிறது.

இது குறித்து கருத்துக் கூறியுள்ள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரனா பொன். செல்வராஜா அவர்கள், இதில் தனியாரின் காணிகளும் உள்ளடங்குவதாகக் கூறி அதனைக் கண்டித்துள்ளார்.