ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“எங்கள் எதிர்ப்பு தொடரும்” ரவுப் ஹக்கீம்

இலங்கையின் 13வது சட்டத்திருத்தம் மற்றும் மாகாண சபை சட்டங்களைத் திருத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் இலங்கையின் ஆளும் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளால் எழுப்பப்பட்ட நிலையில், இதை எதிர்த்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு புதனன்று ஒரு கடிதத்தை எழுதியிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்