ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'கனடா காமன்வெல்த் மாநாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும்'

  • 8 ஜூலை 2013
Image caption கனடா எம்.பி. ராதிகா சிற்சபேசன்

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் செல்லாமல் அங்கு அரச தூதுக்குழுவை மட்டும் அனுப்பும் தீர்மானம் நாட்டின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டுக்கு முரணானது என்று கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது.

இலங்கையில் நடக்கும் மாநாட்டை கனடா ஒட்டுமொத்தமாக புறக்கணித்தால் மட்டுமே மற்றைய நாடுகளும் கனடாவைப் பின்பற்றும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.