ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜூலை கலவரம் : "முயன்றும் மறக்க முடியாத நினைவுகள்"

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற கலவரங்களும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் இன்றளவும் ஆறாத வடுக்களாகவே இருக்கின்றன.

Image caption இவர்களின் உடல் இந்தியாவில் உள்ளம் இலங்கையில்

தலைநகர் கொழும்பு உட்பட பல இடங்களில் தமிழர்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின. பல இடங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

அப்போது உடமைகளை உதறி உயிர்களை மட்டும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அண்டை நாடான இந்தியாவுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறிச் சென்றனர்.

அவர்களில் பெரும்பாலானோர் இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

'கறுப்பு ஜூலை' என்று பாதிக்கப்பட்ட மக்களால் கூறப்படும் அந்த வன்செயல்கள், அவைகளின் தாக்கம், விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்த நிலையில்,அடுத்து என்ன என்று பல விஷயங்கள் குறித்து இப்போது தமிழகத்தில் தங்கியுள்ள சிலர் பிபிசி தமிழோசையிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களை உள்ளடக்கிய சிறப்பு பெட்டகத்தை இங்கே கேட்கலாம்.

தயாரித்து வழங்குபவர் தமிழோசையின் சென்னை செய்தியாளர் டி என் கோபாலன்.