ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமைதியாக முடிந்தன மாகாண சபைத் தேர்தல்கள்

  • 21 செப்டம்பர் 2013

இலங்கையின் வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு நடைபெற்றத் தேர்தல்கள், ஓரிரு சம்பவங்களைத் தவிர பெரும்பாலும் அமைதியாகவே நடைபெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

வட மாகாண சபைக்கான தேர்தலில் வாக்களிப்பு முதலில் மந்தமாக இருந்தாலும் பின்னர் விறுவிறுப்படைந்ததாக அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

உள்ளூர் நேரப்படி மாலை 4.30 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர், வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக எண்ணும் இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.

தேர்தல் முடிவுகள் இரவு எட்டு மணி முதல் வரத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.