'இலங்கை சுய விசாரணை நடத்தி உலகுக்கு காட்ட வேண்டும்': பிரிட்டன்

  • 17 நவம்பர் 2013
Image caption பிரிட்டிஷ் வௌியுறவுச் செயலர் வில்லியம் ஹேக்

இலங்கை சுயமான விசாரணை பொறிமுறை ஒன்றை அமைத்து, அதன் இராணுவப் படையினர் மீதுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை கையாள்வதாக உலகுக்குக் காட்டினால், அது 'அது மிகப்பெரிய மாற்றத்தை' ஏற்படுத்தும் என்று பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் கூறியிருக்கிறார்.

இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் அரசு தலைவர்கள் உச்சிமாநாட்டில் இலங்கையின் மனித உரிமை விவகாரமே முக்கிய பேசுபொருளாக மாறியிருந்தது.

அடுத்த மார்ச் மாதத்துக்குள் இலங்கை அரசாங்கம் அதன்மீதுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்காவிட்டால், சர்வதேச விசாரணையைக் கோரப்போவதாக பிரிட்டன் கூறியுள்ளது.

2015-ம் ஆண்டு நடக்கவுள்ள அடுத்த காமன்வெல்த் மாநாட்டை மால்டாவில் நடத்துவதற்கு காமன்வெல்த் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

அடுத்த காமன்வெல்த் மாநாட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட மொரீசியஸ், இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தைக் காரணம் காட்டி இம்முறை மாநாட்டில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.