ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பேருவளை பகுதிக்கு மஹிந்த விஜயம்

18 ஜூன் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 11:38 ஜிஎம்டி

Image caption பெருவெலப் பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையின் களுத்துறை மாவட்டம், அளுத்கமப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலவரம் மற்றும் வன்செயல் இடம்பெற்றப் பகுதிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பார்வையிட்டார்.

பேருவளை பகுதிக்கு சென்றிருந்த அவர், உள்ளூர் சமூகத் தலைவர்களுடன் நடத்திய ஒரு கூட்டத்தில், இச்சம்பவம் தொடர்பில் ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

அதேபோல் உயிர் மற்றும் உடமைகளை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இதனிடையே அங்கு நடைபெற்ற இன மோதல்களை அடுத்து தமது இடங்களிலிருந்து வெளியேறியுள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கி வருகின்றனர்.

அங்கு நடைபெற்றச் சம்பவங்கள் தொடர்பில் ஐம்பது பேர் அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர், அதேநேரம் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவும் தளர்த்தப்பட்டுள்ளது.