வன்முறைகளை விசாரிக்க உயர்மட்டக் குழு: ஜனாதிபதி

  • 21 ஜூன் 2014

இலங்கையில் நடந்துள்ள அண்மைக்கால அசம்பாவிதங்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு உயர்மட்டக் குழுவொன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் குறுந்தகவல் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கையின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் முயற்சிகளில் சர்வதேச சக்திகள் சில ஈடுபட்டுள்ளதாக மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் பதுளைக்குச் சென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றியுள்ள ஜனாதிபதி, எந்தவொரு தரப்பினரும் சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு இடமளிக்காமல், சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் பொலிசாருக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் உத்தரவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையே பகையை வளர்க்கும் விதத்தில் எந்தவொரு நபருக்கும் அமைப்புக்கும் எதிராக பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் 4 பேர் கொல்லப்பட்டும் பலர் காயப்பட்டும் உள்ளனர். பெருமளவிலான சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளன.