BBC News, தமிழ் - முகப்பு

Top story

தமிழ்நாட்டு அரசியல்

தமிழ்நாட்டு அரசியலில் முத்திரை பதித்தவர்களின் வாழ்க்கை பயணம் எப்படி இருந்தது?

கடந்த 50 ஆண்டுகளுகளில் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்திய தலைவர்கள், தற்போது களத்தில் உள்ள தலைவர்களின் வாழ்க்கைப் போக்கை விவரிக்கும் வகையில் பிபிசி தமிழில் வெளியான கட்டுரைகளை இங்கே பெயர் வாரியாக தொகுத்தளிக்கிறோம்.

பிற செய்திகள்

 • இஸ்ரேல் -பாலத்தீன தரப்பு 3வது இரவாக மோதல்: என்ன நடக்கிறது?

  1967ஆம் ஆண்டு ஜெருசலேம் பழைய நகரம் அமைந்துள்ள கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியதைக் கொண்டாடும் நிகழ்வாக கொடி அணிவகுப்பு நடைபெறுகிறது.

 • எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ் சம்மதித்தது ஏன்?

  முன்னாள் சபாநாயகர் தனபாலை எதிர்கட்சித் தலைவராக முன்மொழியலாம்' என ஓ.பி.எஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், இந்த ஆட்டத்தில் நான் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டார் தனபால். அதேவேளை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வெளியே அதிரடிப்படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

 • சபாநாயகராகும் ராதாபுரம் எம்.எல்.ஏ அப்பாவு: பின்னணி என்ன?

  தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக ராதாபுரம் எம்.எல்.ஏ அப்பாவு தேர்வு செய்யப்பட இருக்கிறார் துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி முன்னிறுத்தப்பட்டுள்ளார். சபாநாயகர் தேர்வில் அப்பாவு இடம்பெற்றது எப்படி?

 • புதுச்சேரிக்கு 3 பாஜகவினரை நியமன எம்எல்ஏக்களாக அறிவித்தது மத்திய அரசு

  இதில் நியமிக்கப்பட்டுள்ள கே.வெங்கடேசன் கடந்த முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கடந்த மார்ச் மாதம் தனது சட்டமன்ற பதவியை ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்தார்.

 • இந்திய வகை கொரோனாவால் அண்டை நாடுகளில் தொற்று அதிகரிக்கிறதா?

  இந்தியாவின் அண்டை நாடுகளிலும் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேபாளத்தில், அங்கு ஏப்ரல் மாதம் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. அரசியல் தலைவர்களிடமிருந்து பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் காலப்போக்கில் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை தவற விட்டு விட்டனர் என மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள் மற்றும் களப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 • நடிகர் மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

  கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவலை பரப்பியதற்காக இவர் மீது காவல்துறையினரால் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு ரூபாய் 2 லட்சம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம், தடுப்பூசி குறித்து தவறான தகவலை பரப்பக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுதலை செய்தது.

 • ட்விட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் கங்கனாவுக்கு சிக்கல்!

  வாங்குவதற்கும், விற்பதற்குமாக இருக்கும் இந்த தளத்தில் நான் கேள்விகள் எழுப்பி அவர்களை நான் சங்கடப்படுத்தியிருக்கிறேன் என கங்கனா கூறியிருப்பது மேலும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது

 • கொரோனா ஆக்சிஜன்: நீதிமன்ற தலையீட்டை தவிர்க்கக் கோரும் இந்திய அரசு

  இந்த நடவடிக்கைகளில் நீதித்துறை குறுக்கீடுகள் இருக்கக் கூடாது. மிகப்பெரிய அளவிலான நலன்களை கருத்தில் கொண்டு இதுபோன்ற நடவடிக்கையை அரசு நிர்வாகமே சுதந்திரமாக எடுக்க விட்டு விட வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

 • புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உடல்நிலை: மருத்துவமனை கூறுவது என்ன?

  புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு இரு நாள்களுக்கு முன்பு வயிற்றுப் போக்கு இருந்துள்ளது. இதையடுத்து கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என கருதி முதல்வர் இல்லத்தில் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர்.

 • கொரோனா நோயாளிகளுக்கு குடும்பத்தினரே சிகிச்சை தரும் அவலம்

  இந்தியாவில் பல வீடுகளில் ஒரு நம்பிக்கையற்ற போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனாவின் இரண்டாம் அலை கடுமையாக பரவிக் கொண்டிருப்பதால் இந்திய சுகாதார அமைப்பு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே வாழ்வா சாவா என்கிற போராட்டத்தில் குடும்ப உறுப்பினர்களே நோயால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

மாலி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்: அதிசயமா, ஆபத்தா?

நாடெங்கும் சிஸியின் 9 குழந்தைகளைப் பற்றித்தான் இப்போது பேச்சு. அவர் கருவுற்றிருந்தபோதுகூட 7 குழந்தைகள்தான் பிறக்கப் போகின்றன என அனைவரும் நினைத்திருந்தார்கள்

தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம்

34 பேரைக் கொண்ட இந்த அமைச்சரவையில் 2 பெண்களும் 2 சிறுபான்மையினரும் இடம்பெற்றுள்ளனர். நிதித்துறை அமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் பழனிவேல் தியாகராஜன், சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவியேற்கும் மா. சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் முதன்முறையாக அமைச்சரவையில் பங்கேற்கின்றனர்.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐநா மனித உரிமை கவுன்சிலுக்கு தரும் அதிகாரங்கள் என்ன?

திரை மறைவாக, வாரக் கணக்கில் நடந்த ராஜாங்க ரீதியிலான ஆதரவு திரட்டல் நடவடிக்கைகளுக்கு பின்பும் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் இலங்கை அரசுக்கு எதிராக முடிந்துள்ளது.

விளையாட்டுத் துறையில் ஆண்களை விட பெண்களுக்கு குறைவாக முக்கியத்துவம்: பிபிசி ஆய்வு

விளையாட்டு வீராங்கனைகள் தொடர்பான செய்திகளில் பயன்படுத்தப்படும் படங்கள் பொதுவாக சிறிய அளவிலானவையாகவே உள்ளதாகவும் சில நேரங்களில் படங்களே இல்லாமலும் இருப்பதாகவும் பிபிசி ஆய்வு கண்டறிந்துள்ளது.

அறிவியல்

கொரோனா: ஆக்ஸிஜன் கான்ஸென்ட்ரேட்டர் என்றால் என்ன, இது உயிரைக் காப்பாற்றுமா?

ஆக்ஸிஜன் செறிவூட்டி என்பது காற்றிலிருந்து ஆக்ஸிஜனை சேகரிக்கும் ஒரு இயந்திரமாகும். இந்த ஆக்ஸிஜன் மூக்கு வழியாக ஒரு குழாய் மூலம் உடலுக்குள் செல்கிறது.

கலை கலாசாரம்

78,000 ஆண்டு பழமையான குழந்தையின் கல்லறை கண்டுபிடிப்பு

`கடைசியாக உறங்கும் போது போர்த்தப்படுவது போல, அக்குழந்தை இலைதலைகளால் ஆன சேலை அல்லது விலங்கின் தோல்களால் மூடப்பட்டிருக்கலாம்'

சிறப்புச் செய்திகள்

தொலைக்காட்சி

ஊடகவியல் கல்வி

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்