அக்டோபர்ஃபெஸ்ட் பீர் விழா இடத்தை முதல்முறையாக சுற்றி வளைத்து பாதுகாப்பு

  • 17 செப்டம்பர் 2016

இன்று மியூனிக் நகரில் தொடங்குகின்ற உலகிலேயே மிக பெரிய பீர் மது விழாவான அக்டோபர்ஃபெஸ்டை முன்னிட்டு, ஜெர்மனி காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஆண்டுதோறும் நடைபெறும் அக்டோபர்ஃபெஸ்ட் பீர் திருவிழாவில் உலக அளவில் இருந்து சுமார் 60 லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர்

கோடைக்காலத்தில் நடைபெற்ற மோசமான தாக்குதல்களை அடுத்து, இந்த நிகழ்வு தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.

அதனால், அக்டோபர்ஃபெஸ்ட் நடைபெறும் இடம் முழுவதும் முதல்முறையாக சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

முதுகில் பைகளை போட்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அதிகப்படியான ஊழியர்கள் போடப்பட்டும், பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் உள்ளன.

படத்தின் காப்புரிமை AP
Image caption ஜெர்மனியின் மியூனிக் நகரில் தொடங்குகின்ற உலகிலேயே மிக பெரிய பீர் திருவிழாவிற்கு கடும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

அக்டோபர்ஃபெஸ்டின் பண்புகளை மாற்றாமல் சமீபத்திய நிகழ்வுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் வடிவமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மியூனிக்கின் துணை மேயர் தெரிவித்திருக்கிறார்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வில் உலக அளவில் இருந்து சுமார் 60 லட்சம் பார்வையாளர்கள் இந்த பீர் திருவிழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்