மன்ஹாட்டன் மாவட்டத்தில் செல்சீ பகுதியில் குண்டுவெடிப்பு, 29 பேர் காயம்

Image caption நேரில் பார்த்தவர் இத்தாலி கோஹாய்: “அதிக சத்தத்துடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது......... கூக்குரலை நான் கேட்டேன”

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மன்ஹாட்டன் மாவட்டத்தில் செல்சீ பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான அளவுக்கு யாரும் காயம் அடையவில்லை.

ஒரு வெடிக்கும் கருவி மூலம் இந்த குண்டுவெடித்துள்ளது என நம்புவதாக சந்தேகப்படும் காவல் துறையினர், சில கட்டிடங்களுக்கு அப்பால் இருப்பதற்கு சாத்திக்கூறு தெரிகின்ற இரண்டாவது கருவியை தேடி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த குண்டுவெடிப்பை திட்டமிட்டு நடத்தியிருப்பது தெரிகிறது என்றும், ஆனால் தீவிரவாதக் குழுக்களுக்கு இதில் தொடர்பு இருப்பதற்கு சான்று இல்லை என்றும் நியூயார்க்கின் மேயர் பில் டி பிளாசியோ தெரிவித்திருக்கிறார்.

சில மணிநேரங்களுக்கு முன்னால் நியூஜெர்சியில் நிகழ்ந்த குழாய் குண்டு வெடிப்புக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த குண்டுவெடிப்பு ராணுவ அறக்கொடை ஓட்டம் நடைபெற இருந்த இடத்திற்கு அருகில் நிகழ்ந்தது. அதில் யாரும் காயமடையவில்லை.