தாய்லாந்தில் இரண்டடுக்கு படகு கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி

படத்தின் காப்புரிமை Bangkok Post
Image caption விபத்துக்குள்ளான படகு

மத்திய தாய்லாந்தில் நடந்த படகு விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

தாய்லாந்தின் ஜெளபிரயா நதியில், இரண்டடுக்கு படகில் சுமார் 100 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு கான்கீரிட் பாலத்தின் மீது மோதி படகு கவிழ்ந்தது.

பலரை காணவில்லை; இருப்பினும் மழை மற்றும் இருளால் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபடுவது கடினமாகிக் கொண்டு வருகிறது.

படகின் ஓட்டுநர், ஆற்றின் நெருக்கடியான பாதையில் மற்றொரு படகு செல்லாமல் இருப்பதை தடுக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டது.