மெக்ஸிகோவில் இரு பாதிரியார்கள் கடத்தி கொலை

மெக்ஸிகோவின் வெராகுரூஸ் மாநிலத்திலுள்ள தேவாலயம் ஒன்றிலிருந்து துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்ட ரோமன் கத்தோலிக்க பாதிரியர்கள் இருவர், கடத்தப்பட்ட சில மணிநேரங்களுக்கு பின்னர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

போஸா ரிக்கா நகரின் சாலை ஒன்றின் ஓரமாக அவர்களின் உடல்கள் வீசப்பட்டிருந்தன.

அவர்களோடு கடத்தப்பட்ட ஓட்டுநர் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த பாதிரியார்கள் கொல்லப்பட்டதற்கான நோக்கம் தெரியவில்லை.

மெக்ஸிகோவின் வளைகுடா கடற்கரை பிராந்தியம் போதை மருந்து போட்டி குழுக்களின் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்