இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டில் விசாரணைக்கு வந்த ஜோர்டானிய எழுத்தாளர் சுட்டுக்கொலை

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டில் வழக்கு விசாரணைக்கு சென்றிருந்த பிரபல ஜோர்டானிய எழுத்தாளர் ஒருவர், தலைநகர் அம்மானில் நீதிமன்றம் ஒன்றுக்கு வெளியே, துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் அமைப்பினரின் போராளி ஒருவர் கட்டில் ஒன்றில் இரு பெண்களுடன் படுத்து கொண்டு கடவுளிடம் பானத்தை கொண்டுவர கேட்பது போல அந்த ஓவியம் வரையப்பட்டிருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம், நஹித் ஹாட்டர் என்ற இந்த எழுத்தாளர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தீவிரவாதிகளை கேலி செய்வது போலவும் மற்றும் மரணத்துக்கு பிறகான வாழ்க்கை குறித்த அவர்களுடைய கருத்துகளையும் கேலி செய்வது போல ஒரு சித்திரம் ஒன்றை பகிர்ந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் அமைப்பினரின் போராளி ஒருவர் கட்டில் ஒன்றில் இரு பெண்களுடன் படுத்து கொண்டு கடவுளிடம் பானத்தை கொண்டுவர கேட்பது போல அந்த ஓவியம் வரையப்பட்டிருந்தது.

ஹாட்டர் உடலில் மூன்று குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும், தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஜோர்டானிய அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்