பாக்தாத்தில் தற்கொலைக் குண்டு தாக்குதலில் 6 பேர் பலி
இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள தெரு ஒன்றில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் தன்னை தானே வெடிக்க செய்து நடத்திய தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர்.
ஷியா முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய இஸ்கான் மாவட்டத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
ஆனால், பாக்தாத்தில் இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் அமைப்பினர் இது போன்ற வெடிகுண்டு தாக்குதல்களை அடிக்கடி நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.