அலெப்போ: மருத்துவமனைகள் மீதான வான்வழித்தாக்குதலுக்கு தடைவிதிக்க தொண்டு நிறுவனம் கோரிக்கை

சிரியாவில் போராளிகள் வசமுள்ள கிழக்கு அலெப்போவில் இரு மருத்துவமனைகள் மீது வான் வழித்தாக்குதல் நடத்தப்பட்டதில் அவைகளைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, மருத்துவ நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தடைவிதிக்க வேண்டுமென எல்லைகளற்ற மருத்துவர்கள் (எம்.எஸ்.எஃப் )என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஐ.நா பாதுகாப்பு சபையை கேட்டு கொண்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த போர், யுத்த விதிகளை மீறுவதில் மிகவும் அடிமட்டத்துக்கு செல்லும் போட்டி என்று ஜோனா லியூ கடுமையாக சாடியுள்ளார்.

நிலம் மற்றும் வானிலிருந்து நடத்தப்படும் கொடூரமான மற்றும் இடைவிடாத தாக்குதல் காரணமாக, அலெப்போவின் கிழக்கு பகுதியில் 2,50,000 எண்ணிக்கை தொகை கொண்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க வெறும் ஏழு அறுவை சிகிச்சை நிபுணர்கள் மட்டுமே உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னர், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லெவ்ரோவிடம், சிரியாவில் நடைபெற்று வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தாவிட்டால் அமெரிக்கா, ரஷ்யா உடனான சிரியா தொடர்பான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்