உற்பத்தி குறைப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து அதிகரித்த கச்சா எண்ணெய் விலை

  • 29 செப்டம்பர் 2016

பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பானது உற்பத்தியை குறைத்து கொள்ள ஒப்புக் கொண்ட பிறகு எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்வை சந்தித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு

இந்த ஒப்பந்தம் குறித்த செய்திகள் வெளியானதை தொடர்ந்து, பிரன்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் ஐந்து சதவிகித அளவிற்கு உயர்ந்துள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளில் போடப்பட்டுள்ள முதல் ஒப்பந்தம் இதுவாகும்.

படத்தின் காப்புரிமை Getty Images

நவம்பர் மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் கூட்டமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், ஒரு நாளைக்கு 7 லட்சம் பீப்பாய்கள் குறைவாக உற்பத்தி செய்ய உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த உற்பத்தி குறைப்பானது கூட்டமைப்பில் உள்ள நாடுகளிடையே சமமாக பகிர்ந்து அளிக்கப்படவில்லை.

இரான் மட்டும் தனது உற்பத்தி அளவை அதிகரித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்