இந்திய திரைப்படங்களை திரையிடப் போவதில்லை- பாகிஸ்தான் திரையரங்குகள்

பாகிஸ்தானில் முக்கிய திரையரங்குகள் இந்தியப் படங்களை திரையிடப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இரு நாடுகளுக்கிடையே ராணுவ பதற்ற நிலை அதிகரித்ததை அடுத்து, பாகிஸ்தானின் ராணுவத்துக்கு ஆதரவாக தாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அவை கூறுகின்றன.

லாகூர், கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய பெரு நகரங்களில் இந்தியப் படங்களுக்குத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாராகும் இந்தித் திரைப்படங்கள் பாகிஸ்தானில் பிரபலமாக உள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

நதீம் மந்திவாலா என்ற திரைப்பட வர்த்தகர், தனது வணிகம் இதனால் பாதிக்கப்படும் என்றார்.

இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பாகிஸ்தான நடிகர்களை இந்தியப் படங்களில் பயன்படுத்தத் தடை விதித்து ஒரு நாளைக்குப் பின் இந்த நடவடிக்கை வருகிறது.

சார்க் மாநாடு- இந்தியாவின் 'திசை திருப்பும் முயற்சி'- பாகிஸ்தான்

இதனிடையே, பாகிஸ்தானில் நவம்பர் மாதத்தில் நடக்கவிருந்த தெற்காசிய நாடுகளின் அமைப்பான, சார்க் மாநாட்டை தான் ஒத்தி வைக்க நேரிட்டிருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது.

இந்தியா பல தெற்காசிய நாடுகளை இந்த மாநாட்டிலிருந்து விலகச் செய்ததை அடுத்து இந்த அறிவிப்பு வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இந்தியாவின் இந்த நடவடிக்கையை தான் கண்டிப்பதாகவும், காஷ்மீரில் இந்தியா செய்யும் அட்டூழியங்கள் என்று அது வர்ணிக்கும் செயல்களிலிருந்து கவனத்தைத் திசை திருப்பவே இந்தியா முயல்வதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

தொடர்புடைய தலைப்புகள்