காஷ்மீரில் இந்தியா தூண்டுதலற்ற துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக பாக்., புதிய குற்றச்சாட்டு

பல நாட்களாக இருநாடுகளுக்கு இடையேயான உச்சபட்ச ராணுவ பதற்றத்தை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியான காஷ்மீரில் இந்தியா தூண்டுதலற்ற புதிய துப்பாக்கிச்சூடு ஒன்றை நடத்தியதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஆனால், இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எந்த தகவலையும் பாகிஸ்தான் குறிப்பிடவில்லை.

இந்திய துருப்புகள் கட்டுப்பாட்டு கோட்டைத்தாண்டி, சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் பீரங்கிக் குண்டுகளை பயன்படுத்தி பிம்பெர் நகரில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் துருப்புகள் சரியான முறையில் பதிலடி கொடுத்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்தியாவிடமிருந்து இதுவரை எந்த கருத்தும் வெளிவரவில்லை.

இந்திய ராணுவம் பாகிஸ்தானுடனான கட்டுப்பாட்டு கோடு அருகே இருந்த தீவிரவாதிகளின் நிலைகள் மீது துல்லிய தாக்குதலை நடத்தியதாக இந்திய ராணுவ தளபதி தெரிவித்திருந்தார் . அந்த தளபதி காஷ்மீரில் படையினர் நிலைகளைப் பார்வையிட்டார்.

தொடர்புடைய தலைப்புகள்