ஆழ்கடல் உயிரினங்களை பாதிக்கும் நுண் பிளாஸ்டிக் பொருட்கள்: பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்

  • 1 அக்டோபர் 2016

உலகில் உள்ள சமுத்திரங்களின் மிக ஆழமான பகுதிகளில் வாழும் விலங்குகளை நுண் பிளாஸ்டிக் மாசுக்கள் பாதித்து வருவதற்கான ஆதாரங்களை முதன்முறையாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இந்திய பெருங்கடல் மற்றும் மத்திய அட்லான்டிக் கடல் பகுதிகளில் உள்ள உயிரினங்களை தேட தொலைவிலிருந்து நீருக்கடியில் இயங்கும் வாகனம் ஒன்றை பயன்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆழ்கடலில் வசிக்கும் நண்டுகள், லாப்ஸ்டெர்கள் மற்றும் கடல் வெள்ளரி போன்ற உயிரினம் ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைவான அளவில் இருந்த நுண் பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

செயற்கை இழைகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சட்டைகளை துவைக்கும் போதோ அல்லது மீன்பிடி வலைகளிலிருந்தோ இந்த பிளாஸ்டிக் நுண் துகள்கள் கடலுக்குள் கலந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்