சிரியாவின் போர் யார் கைகளில் உள்ளது?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிரியாவின் போர் யார் கைகளில் உள்ளது?

சிரியாவில் நடைபெற்று வரும் போரும் அதை நிறுத்தும் வல்லமையும் யாரின் கைகளில் உள்ளன எனும் கேள்விக்குறிகள் எழுந்துள்ளன.

அங்கு கடந்த மாதம் ஏற்பட்ட போர் நிறுத்த உடன்பாடு சிறிய நம்பிக்கையை கொடுத்தது. ஆனால் ஐ நா வாகனங்கள் மீதான தாக்குதலை அடுத்து அதுவும் முறிந்தது.

அந்தக் குண்டுத் தாக்குதலுக்கும் ரஷ்யாவே காரணம் என்கிறது அமெரிக்கா.

இது போர் குற்றம் என ஐ நா கூறுகிறது. ஆனால் தாங்கள் தாக்குதலை நடத்தவில்லை என்கிறது ரஷ்யா.

இந்நிலையில் அலெப்போ நகர் மீதான தாக்குதல்கள் தொடருகின்றன.