இராக்கில் தவறான இலக்கு மீது தாக்குதல்-குறைந்தது 20 பேர் பலி

இராக்கின் மோசுல் நகரின் தென்பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதல்களில் அரச ஆதரவு பழங்குடியினப் போராளிகள் குறைந்தது இருபது பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption மோசுல் நகரைக் கைப்பற்ற அரச படைகள் தீவிர முயற்ச்

ஐ எஸ் பயங்கரவாதிகள் எனக் கருதி அவர்கள் தவறுதலாக இலக்குவைத்து தாக்கப்பட்டுள்ளனர்.

இராக்கின் வான்பரப்பில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் விமானங்களும், அரச விமானங்களும் மட்டுமே பறக்க முடியும்.

இவர்கள் பெரும்பாலும் கூட்டுப்படைகளின் தாக்குதலிலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இராக்கில் ஐ எஸ் அமைப்பின் முக்கியத் தளமான மோசுல் நகருக்கு அறுபது கிலோமீட்டர் தெற்கேயுள்ள கய்யாராஹ் நகருக்கு அருகே இத்தாக்குதல் நடைபெற்றது.

அண்மையில்தான் அந்நகரை ஐ எஸ் அமைப்பிடமிருந்து அரச படையினர் கைப்பற்றியிருந்தனர்.

மோசுல் நகரை இந்த ஆண்டின் இறுதிக்குள் முற்றாக கைப்பற்றுவதற்கான முதல்படியாக கய்யாராஹ் நகர் மீட்கப்பட்டது பார்க்கப்படுகிறது.