ஐ நாவின் புதிய தலைமைச் செயலராக அண்டோனியோ குட்டரஸ் தேர்வாகும் வாய்ப்பு

  • 5 அக்டோபர் 2016

போர்சுகலின் முன்னாள் பிரதமர் அண்டோனியோ குட்டரஸ் ஐ நாவின் அடுத்த தலைமைச் செயலராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption குட்டரஸ் முன்னர் ஐ நா அகதிகள் நல ஆணையராக இருந்தார்

இது தொடர்பில் நடைபெற்ற முதல்கட்ட வாக்கெடுப்பில், ஐ நா பாதுகாப்பு குழுவிலிலுள்ள ஐந்து நிரந்திர உறுப்பினர்களில் யாரும் அவரை எதிர்க்கவில்லை.

இதனால் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஐ நா பொதுச்சபைக் கூட்டத்தில் அவர் தெர்தெடுக்கபடுவது சம்பிரதாயமான ஒன்றாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது.

ஐ நா பொதுச்சபையின் இறுதி முடிவை அடுத்து, புதிய தலைமைச் செயலர் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் பதவியேற்பார்.

குட்டரஸ் ஐ நாவின் அகதிகள் நல அமைப்பின் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

ஐ நாவின் தலைமைச் செயலராக பெண் ஒருவர் தேர்தெடுக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கைகளையும் மீறி குட்டரஸின் பெயர் முன்னிலைப்படுத்தப்பட்டது.